நீங்கள் 20 வயதுகளில் இருந்தால் கல்விக்கு அடுத்தபடியாக நீங்கள் செய்ய வேண்டியது சேமிப்பு. கையில் Pocket Money அல்லது நீங்கள் சம்பாதித்த சிறிய பணம் இருந்தாலோ கண்ணை மூடிக்கொண்டு சேமிக்கும் பழக்கத்தை வளர்த்துக் கொள்ளுங்கள்.
கையில் 100 ரூபாய் இருந்தாலும் சேமிக்க தொடங்குங்கள். இதெல்லாமா சேமிப்பாங்க என உடன் இருப்பவர்கள் உங்களை கிண்டல் செய்யலாம். 20 வயதுகளில் பணம் என்பதை தாண்டி பழக்கம் முக்கியமானது.
ஒரு வேளை 20 வயதில் உங்களிடம் சேமிக்கும் பழக்கம் இல்லையென்றால் 30 வயதில் கோடி ரூபாய் சம்பாதித்தாலும் கையில் நிற்காது. திரும்பி பார்த்தால் காலமும், பணமும் எங்கே சென்றது என தெரியாது.
எழுதி வைத்துக்கொள்ளுங்கள். 20 வயதுகளில் சேமிக்க தொடங்கினால் 30 வயதுகளில் உங்கள் பேரில் உங்களால் சொத்துக்களை வாங்க முடியும்
20 வயதில் இவற்றின் மூலம் சேமிக்கலாம்
வீட்டு அருகே உள்ள நகைக்கடையில் 916 தங்க நகை சீட்டு, வெள்ளி சீட்டு ( மாதம் 100 ரூபாயில் தொடங்கலாம்)இது ஆன்லைனிலும் செலுத்தலாம
Post office இல் 1 வருட , 5 வருட RD ( Recurring Deposit) திட்டம் ( மாதம் 100 ரூபாயில் தொடங்கலாம்)
Post Office இல் PPF - ( மாதம் 500 ரூபாயில் இருந்து தொடங்கலாம்)
நிதி ஆலோசகர் மூலம் முறையாக அடிப்படைகளை தெரிந்துக்கொண்டு Share Market or Mutual funds ல் சேமிக்கலாம்
Online Banking options இருந்தால் நீங்கள் கணக்கு வைத்திருக்கும் வங்கியில் RD மூலம் சேமிக்கலாம். குறிப்பிட்ட தொகையை Fix செய்துவிட்டால் மாதா மாதம் அதுவே Deduct ஆகும். முதிர்வு காலத்தில் அதுவே உங்கள் Account இல் Credit ஆகிவிடும்்
கல்வியும், சேமிப்பும் நீங்கள் வாழ்வில் நினைத்த உயரங்களை அடைய வைக்கும்
மேலும் விவரங்களுக்கு உடனே தொடர்பு கொள்ளுங்கள் 9382106709
We use cookies to analyze website traffic and optimize your website experience. By accepting our use of cookies, your data will be aggregated with all other user data.